கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகள் பிப்ரவரி 29ஆம் தேதி அடைக்கப்பட்ட பிறகு தண்ணீர் தட்டுப்பாடு பயிர்கள் நிலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா ஆகியவற்றுக்காக மார்ச் 15 வரை பெருஞ்சாணி அணையில் இருந்து தண்ணீர் பட்டணங்கால் தவிர மற்ற கால்வாய்களில் வழங்கப்பட்டு வருகிறது. பேச்சிப்பாறை அணை மூடப்பட்டு உள்ளது. எனவே அனைத்து கால்வாய்கள் போன்று பட்டணம் கால்வாய்களிலும் மார்ச் மாதம் 15 ஆம் தேதி வரை தண்ணீர் வழங்க வேண்டும் என்று கேட்டு கருங்கல் பாசன பிரிவு உதவி பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியாளர் உத்தரவுப்படி நீர்வளத்துறை அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. கோதையாறு செயற்பொறியாளர் ஜோதி பாசு தலைமையில் நடந்த கூட்டத்தில் பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, பட்டணங்கால் தலைவர் கோபால், புலவர் செல்லப்பா, துரைராஜ் ,ஏசுதாஸ், முருகேச பிள்ளை, எனில் ஜெனோ உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்த வருட பராமரிப்பு நிதியில் சேனல்கள் தூர்வாருதல் மற்றும் சீரமைப்பு பணிகளை மாற்றி 27ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பேச்சிப்பாறை முதல் பெருஞ்சாணி வரை உள்ள 16 கிலோமீட்டர் தூரம் உள்ள போதையாறு இடது கரை கால்வாய் புனரமைப்பு பணிகளை மார்ச் 27ஆம் தேதி பூ முடிக்க வேண்டும் பட்டணங்கால் வாய்க்கு பேச்சு பாறையில் இருந்து மட்டுமே தண்ணீர் எடுக்க இயலும். சுமார் 70 கிலோமீட்டர் பிரதான கால்வாய் மட்டும் நீளமுள்ள பட்டணங் கால் மற்றும் கிளை கால்வாய்களுக்கு கடைமடை வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் எனில் குறைந்தது 15 நாட்களாவது தேவைப்படும் எனவே கால்வாய் புனரமைப்பு பணிகளை மார்ச் 27ஆம் தேதிக்குள் முடிப்பது என்றும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 7 வரை பட்டணங் கால்வாயில் தண்ணீர் விடுவது என்றும் அதற்கான அரசாணை பெறுவதற்கான நடவடிக்கைகளை மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர், தொகுதி எம்எல்ஏ, ஆட்சியாளர், செயற்பொறியாளர் ஆகியோர் மூலம் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.