பட்டாதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

Share others

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்படும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 25.10.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

இத்தேர்வுக்கு தற்சமயம் முதல் 30.11.2023 வரை http://www.trb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய  தகுதி TET PAPER-II-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக  வருகின்ற 22.11.2023 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மயில் கேட் அருகிலுள்ள சிவகங்கை படிப்பு வட்டத்தில் நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள ஆர்வலர்கள் bit.ly/trbsvgclass என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அலுவலக வேலைநாட்களில் நேரிலோ அல்லது 04575 245225 என்ற தொலைபேசி எண் வாயிலாக தொடர்புகொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும், http://t.me/svgemployment என்ற TELEGRAM CHANNEL வாயிலாகவோ அல்லது studycirclesvg@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்புகள் தொடர்பான விவரங்கள் தொடர்பாகவும் அறிந்து கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான http://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுகளுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரிதேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே வேலைநாடுநர்கள் மேற்காணும் இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்துகொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *