கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 15 ஆம் தேதி துவங்கி 19ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலையில் முன்னோர் நினைவு சிறப்பு திருப்பலி இணை பங்குத்தந்தை அருட்பணி ராபின்சன் தலைமையில் நடந்தது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி அகமதாபாத் மறைமாவட்ட மேதகு ஆயர் அத்தனாசியுஸ் இரத்தினசாமி தலைமையில் அருளுரையோடு நடந்தது. அருள்பணி பேரவையினர் சிறப்பித்தனர். இரவில் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 2 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி ஆற்றூர் பங்குத்தந்தை அருட்பணி வெலிங்டன் தலைமையில் படர்நிலம் பங்குத்தந்தை அருட்பணி ஆரோக்கிய ஜோஸ் அருளுரையோடு நடக்கிறது. அன்பிய ஒருங்கிணையத்தார் சிறப்பிக்கின்றனர். இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி குழிவிளை பங்குத்தந்தை அருட்பணி தாமஸ் குருசப்பன் தலைமையில் கல்லுக்கூட்டம் பங்குத்தந்தை அருட்பணி சுனில் அருளுரையோடு நடக்கிறது. இயக்கங்கள், திருத்தூதுகழகங்களின் ஒருங்கிணையத்தார் சிறப்பிக்கின்றனர். இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி வட்டம் பங்குத்தந்தை அருட்பணி சகாய தாஸ் தலைமையில் ஆலன்விளை பங்குத்தந்தை அருட்பணி ஜாண் விபின் அருளுரையோடு நடக்கிறது. முதல் திருவிருந்து பெறுவோர் மற்றும் மறைக்கல்வி மன்றத்தார் சிறப்பிக்கின்றனர். மாலை 6:30 மணிக்கு ஜெபமாலை ,புகழ்மாலை, திருப்பலி வெள்ளமடம் பங்குத்தந்தை அருட்பணி பேட்ரிக் சேவியர் தலைமையில் கோட்டாறு மறை மாவட்ட அன்பிய பணிக்குழு செயலர் அருட்பணி சகாய கிளாசின் அருளுரையோடு நடக்கிறது. கண்டன்விளை, சித்தன்தோப்பு, இரணியல் இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 5 ம் நாள் விழாவான 19 ம் தேதி காலை 8.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி குழித்துறை மறைமாவட்ட அருட்பணி ரஸல் ராஜ் தலைமையில் நடக்கிறது. பண்டாரவிளை இறைமக்கள், மண்ணின் மகள்கள் சிறப்பிக்கின்றனர். மாலை 6.30 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கமும் இரவு 7:30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழாவும், 9 மணிக்கு சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பண்டாரவிளை பங்கு இறைமக்கள், அருள்பணி பேரவையினர், பங்குத்தந்தை அருட்பணி சகாய ஜஸ்டஸ், பங்கு அருள்பணி பேரவை துணைத்தலைவர் அகஸ்டின், செயலாளர் ஜாண் பெஞ்சமின், துணைச் செயலாளர் கிளாட்சன் ஆன்றோ, பொருளாளர் ஜோஸ்லின் ஷகிலா ஆகியோர் இணைந்து செய்துள்ளனர்.