43-வது அகில இந்திய மூத்தோர் தடகள போட்டிகள் பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு அரங்கில் பிப்ரவரி மாதம் 2, 3, மற்றும் 4 தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு ,கேரளா, கர்நாடகா, பாண்டி, மகாராஷ்டிரா, ஹரியானா, சண்டிகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து ஆண்கள் பெண்கள் என சுமார் 900 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள் இந்த போட்டியில் 30 வயது முதல் 90 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் போட்டியில் கலந்து கொள்கிறார்கள் இந்த போட்டிக்கு தலைமை விருந்தினராக தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு கலந்து கொள்கிறார். போட்டிகளை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் கார்த்திகேயன் துவக்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக எம்.பி. ஞான திரவியம், மேயர் சரவணன், எம்எல்ஏ அப்துல் வஹாப், எம் எல் ஏ நைனா நாகேந்திரன் மற்றும் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரேம்குமார் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர்.
இந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாவட்டத்தின் செயலாளர் மெயின்ஸ்டன் பீட்டர் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.