கன்னியாகுமரி மாவட்டம் பெத்தேல்புரம் எம் எம் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்மஸ் விழா நடந்தது. இந்த விழாவுக்கு பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஸ்காட் கிறிஸ்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் ஜேம்ஸ் ஆர் டானியல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கிறிஸ்மஸ் சிறப்புரை வழங்கினார். பெத்தேல்புரம் சிஎஸ்ஐ சபை போதகர் ராஜன் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தி வழங்கினார். பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற சிறப்பு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுரேஷ்குமார் தலைமையில் தலைமை ஆசிரியருடன் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.