மக்கள் குறைதீர்க்கும் நாள்

Share others

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2023
இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 11.12.2023 அன்று காலை 11 மணியளவில் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் ஏதேனும் குறைகள் இருப்பின் பொதுமக்கள் அதனை இந்த கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம் அல்லது தங்கள் குறைகளை தபால் மூலமாக அனைத்து விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம். தபால் உறையின் மீது முன்பக்க மேல்பகுதியில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் டிசம்பர் 2023 என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். புகார் மனுக்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 8.12.2023 ஆகும். அனுப்ப வேண்டிய முகவரி
க. செந்தில் குமார்,
அஞ்சலக கண்காணிப்பாளர்,
கன்னியாகுமரி கோட்டம்,
நாகர்கோவில் – 629001. இவ்வாறு கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *