கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன்
திருக்கோவில் மாசிக் கொடைவிழாவினை முன்னிட்டு 12.3.2024 (செவ்வாய்
கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு
அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி
உத்தரவிடப்படுகிறது.
12.3.2024 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக
2024 ஏப்ரல் திங்கள் முதல் சனிக்கிழமை (6.4.2024) அன்று கன்னியாகுமரி
மாவட்டத்தில் மேற்படி உள்ளூர் விடுமுறையினை ஈடுசெய்ய மாநில அரசு
அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன்
திருக்கோவில் மாசிக் கொடைவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை செலவாணி
முறிச் சட்டம் 1881 இன் படி
அறிவிக்கப்படவில்லை என்பதால் 12.3.2024 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில்
தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட
அவசரப்
பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக்
கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்து உள்ளார்.