கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி குருசடி சந்திப்பில் மழைநீர் ஓடையை சரி செய்ய கேட்டு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நூதன போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் சுசீலா, கார்மல், செல்வராஜ் , கிறிஸ்துதாஸ், வில்லுக்குறி பேரூர் செயலாளர் மிக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மழைநீர் ஓடையை சரி செய்ய கேட்டு நூதன போராட்டம்
