கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய பெருவிழா ஜனவரி மாதம் 17ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் பணியாற்றி நினைவில் வாழும் அருட்ப பணியாளர்கள், அருள் சகோதரிகள் மற்றும் பங்கிற்கு நிலம் தானம் கொடுத்தவர்கள் நினைவு திருப்பலி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் மேதகு ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. இரவில் பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும், இரவில் பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 3 நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி, திருமுழுக்கு வழங்குதல் கோட்டாறு மறை மாவட்ட மேனாள் ஆயர் மேதகு பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடக்கிறது.மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி கழக பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு வில்லுக்குறி வட்டார மனிதநேய கூட்டமைப்பு பொதுக்கூட்டமும், 11 மணிக்கு பகிர்வின் சமபந்தி விருந்தும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 9 ம் நாள் விழாவான 25 ம் தேதி காலை 6 மணிக்கு முதல் திரு விருந்து திருப்பலி நடக்கிறது.மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு மாலை ஆராதனை புலியூர் குறிச்சி பங்குத்தந்தை அருட்பணி ஜேசுரெத்தினம் தலைமையில் மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் மேதகு வின்சென்ட்மார் பவுலோஸ் மறையுரையோடு நடக்கிறது. இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி, சிறப்பு தவில், வானவேடிக்கை நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலை 5.30 மணிக்கு திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியும், 8.30 மணிக்கு திருவிழா திருப்பலியும் மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி , சிறப்பு தவில், இரவு 8 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்கில் கண்தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்குதல் மற்றும் திருவிழா நன்கொடையாளர்கள், சிறப்பு குழுக்களின் பொறுப்பாளர்களை கவுரவித்தலும் நடக்கிறது. விழாவின் முன் தயாரிப்பாக 13,14,15 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நற்செய்தி பெருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு மேய்ப்புப்பணி பேரவை, பங்கு இறைமக்கள், அருட்சகோதரிகள், பங்குத் தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன், இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் எட்வின் சேவியர் செல்வன், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், துணைச் செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.