கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் தலைமையில்
மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து வருகிற
25.8.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மீனவர் குறை
தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மீன்வளம் மற்றும் மீனவர்
நலத்துறை மற்றும் இதர அரசுத்துறைகளால் நிறைவேற்றப்பட வேண்டிய
மீனவர்களின் குறைகள், கோரிக்கைகள் / தேவைகள் அடங்கிய மனுக்களை
25.8.2023 அன்று நடைபெறும் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நேரில்
வழங்கிடக்
கேட்டுக்கொள்ளப்படுகிறது. பிற
கோரிக்கைகளை ஒரே மனுவில் கொடுக்காமல் துறை வாரியாக தனித்தனி
அரசுத்துறைகள் சார்ந்த
மனுக்களாக வழங்கிட வேண்டும். 25.8.2023 அன்று பெறப்படும் மனுக்களை
சம்பந்தப்பட்ட பிற அரசுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை
மேற்கொண்டு அதன்
விபரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
நடைபெறும் அடுத்த மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும்.
கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் மீனவர்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் மேற்படி
கூட்டத்தில் கலந்து
கொள்ளுமாறு
மாவட்ட
ஆட்சியாளர்
ஸ்ரீதர். கேட்டுக்கொள்கிறார்.