கன்னியாகுமரி மாவட்டம். தேரூர். மயிலாடி, கொட்டாரம், கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், தெற்கு
தாமரைகுளம் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சாலை மேம்பாட்டு பணி மற்றும் குடிநீர்
திட்ட பணிகளை தமிழக பால் வளத்துறை துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,
நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில்
துவக்கி வைத்து, தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு
தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி
பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகளின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற
சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ்(2023-2024) ரூ.23 லட்சம் மதிப்பில் தேரூர்
இரண்டாம்நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட குலசேகரம்புதூர் 2-வது வார்டு மெயின் ரோடு முதல்
நியாவிலைக்கடை கிழக்குப் பக்கம் வரை. நியாவிலைக்கடை முதல் யாதவர் அம்மன் கோயில் வரை.
யாதவர் அம்மன் கோயில் முதல் காலபெருமாள் கோயில் வரை அலங்கார ஓடு அமைக்கும் பணி, மாநில
நிதிக்குழு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.42 லட்சம் மதிப்பில் மயிலாடி
பேரூராட்சிக்கு உட்பட்ட தாமு கிருஷ்ணா நகர் மெயின் ரோடு முதல் தெரு மற்றும் இரண்டாவது தெரு.
காமராஜர் நகர் முதல் குறுக்கு மேற்கு தெரு மற்றும் ஜோசப் புரம் முதல் அவரிவிளை தெருக்களில் பவர்
பிளாக் கட்டைகளால் தளம் அமைக்கும் பணி. கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்ருதி 2.0
திட்டத்தின் கீழ் ரூ.8.1 கோடி மதிப்பில் குடிநீர் திட்டப்பணிகளும் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட அஞ்சு கூட்டு விளை சாலை ரூ.38 லட்சம்
மதிப்பிலும், ரூ.34 லட்சம் மதிப்பில் பயோ மைனிங் முதல் கோவளம் வரை தார் சாலை அமைக்கும் பணி,
ரூ.20.70 லட்சம் மதிப்பில் சின்ன முட்டம் போட் யார்ட் தார் சாலை அமைக்கும் பணி, ரூ.20.70 லட்சம்
மதிப்பில் வடக்கு குண்டல் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி. ரூ.14.50 லட்சம் மதிப்பில்
ஒற்றையால் விளை கீழத்தெரு முதல் இராஜ சங்கீத தெரு. பாலசுப்பிரமணியம் தெரு பகுதியில்
அலங்கார தரை ஓடு அமைத்தல் பணி. அகஸ்தீஸ்வரம் முதல்நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில்
தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 28 லட்சம் மதிப்பில் வெள்ளையன் தோப்பு
ஸ்ரீமன் நாராயணசாமி திருக்கோவில் முன்பு அய்யா கோயில் சாலை மற்றும் நாச்சியார் அம்மன் கோயில்
முதல் கவற்குளம் கிராமம் செல்லும் சாலை அலங்கார தரை கற்கள் தளம் அமைக்கும் பணி.
தென்தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட குமாரபெருமாள் விளை பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற
சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 79.50 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணி என
மொத்தம் சுமார் ரூ.11.10 கோடி மதிப்பில் சாலை பணிகள் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள்
அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த
அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பால்வளத்துறை துறை அமைச்சர்
மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
/
நடைபெற்ற நிகழ்ச்சிகளில் அரசு வழக்கறிஞர் மதியழகன், தோவாளை மற்றும்
அகஸ்தீஸ்வரம் வேளாண் விளைபொருள் கூட்டுறவு சங்க இயக்குநர் பூதலிங்கம், வட்டார
வேளாண்மை ஆலோசனைக்குழு தலைவர் தாமரை பாரதி, பாபு, பேரூராட்சி தலைவர்கள்
குமரி ஸ்டீபன் (கன்னியாகுமரி), அன்பரசி (அகஸ்தீஸ்வரம்), அமுதா ராணி (தேரூர்),
விஜயலெட்சுமி (மயிலாடி), செல்வகனி (கொட்டாரம்), ஊராட்சி ஒன்றியக்குழு
துணைத்தலைவர் சரவணன், பேரூராட்சி உறுப்பினர்கள் ராஜன், புவியூர் காமராஜ்.
எட்வின் ராஜ், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள். பொறியாளர்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள்
உட்பட பலர் கலந்து கொண்டார்கள்,