விவசாயிகள் பதிவு எண் வழங்கும் திட்டம்
விவசாயிகளுக்கு அவர்களின் நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விபர எண் வழங்கும் திட்டம் தமிழக அரசினால் தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்ற ஒவ்வொரு விவசாயிகளுக்கும், தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும்.
இனிவரும் காலங்களில் அரசின் ஒன்றிய மற்றும் மாநில அனைத்து மானியங்களும் இந்த அடையாள எண்ணின் அடிப்படையிலேயே வழங்கப்படும்
நன்மைகள்:
- அனைத்து துறை பயன்களை ஒற்றை சாளர முறையில் பெறலாம்
- ஒவ்வொரு முறையும் விண்ணப்பிக்கும்போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.
- அரசின் மானியங்கள் சரியான நபருக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும்.
- விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால், முன்னுரிமை அடிப்படையில் அரசின் திட்டங்களை பெற்றுக் கொள்ளலாம்.
- கூட்டுறவு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெறும் வசதி.
- இந்த அடையாள எண் தரவுகள் 24 அரசுத் தறைகளுக்கு வழங்கப்பட்டு, இதன் மூலமே மானியங்கள் வழங்கப்படும்.
முகாம்கள்:
இந்த அடையாள எண்கள் வழங்கும் முகாம்கள் 10.2.2025 முதல் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் சகோதரத்துறை அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் தங்களுடைய ஆதார், மொபைல் போன் மற்றும் நில ஆவணங்கள் நகல்களுடன் முகாமில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.