வெளி மாநில தொழிலாளர்களுக்கு புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்

Share others

சிவகங்கை மாவட்டத்தில், வெளி மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் வேறு எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்கள் , புதிய குடும்ப அட்டை பெறும் பொருட்டு eShram Portal என்ற இணையதள தரவு தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரர் உரிய படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்து தொடர்புடைய குடிமைப்பொருள் தனிவட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அளிக்கலாம். அதன், அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக, சம்மந்தப்பட்ட மனுக்களின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நிரந்தமாக தங்கி உள்ளவர்களுக்கு புதிய குடும்ப அட்டை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சிவகங்கை மாவட்டத்திற்கு தற்காலிமாகவோ அல்லது குறுகிய காலத்திற்கு புலம் பெயர்ந்து அவர்களது சொந்த மாநிலத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் eShram Portal மூலம் விண்ணப்பித்தும், மனுதாரர் உரிய படிவத்தில் விவரங்களைப் பூர்த்தி செய்த விண்ணப்பித்தினை வட்ட வழங்கல் அலுவலகங்களில் அளிக்கவும், அவ்வாறு பெற்ற மனுவினை அவர்களது சொந்த மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகம் மூலமாக அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

புதிய குடும்ப அட்டை பெற்றப்பின்னரும், ஏற்கனவே குடும்ப அட்டை பெற்றுவர்களும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் எந்தவொரு நியாயவிலைக்கடையிலும் அத்தியாவசிய பொருள்களைப் பெற்று பயன்பெறலாம்.

இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் குடும்ப அட்டை இல்லாத புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்கள் புதிய குடும்ப அட்டை தேவை கருதி eShramPortal மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *