அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா ஏப்ரல் மாதம் 24 ம் தேதி துவங்கி மே மாதம் 3 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலையில் கல்லறைத் தோட்டத்தில் முன்னோர் நினைவுத் திருப்பலி அருட்பணி பிரான்சிஸ் செபிக்க நடந்தது. 8 மணிக்கு திருக்கொடி காணிக்கை வைத்தல் நடந்தது. மாலையில் செபமாலை, புகழ்மாலையும் தொடர்ந்து திருக்கொடியேற்றம், திருப்பலி மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் செபிக்க, முளகுமூடு வட்டார முதல்வர் அருட்பணி டேவிட் மைக்கிள் சிந்திக்கவும், மண்ணின் மைந்தர் அருட்பணி பிரான்சிஸ் இணைந்து செபிக்க நடந்தது. 2 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை 6.30 மணிக்கு திருப்பலி அன்பிய பணிக்குழு இயக்குநர் அருட்பணி ஆல்பின் விஜய் செபிக்க அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ததேயுஸ் சிந்திக்க நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு சிறப்பு நிகழ்வு கலைநிகழ்ச்சி, சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 7 மணிக்கு திருப்பலி சுங்கான்கடை புனித சவேரியார் மருத்துவமனை இயக்குநர் அருட்பணி சார்லஸ் விஜு செபிக்க நடக்கிறது. 9 மணிக்கு முழு நாள் நற்கருணை ஆராதனையும் மாலை 5 மணிக்கு நற்கருணை பவனியை கண்டன்விளை இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ் வழி நடத்துகிறார். 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு திருப்பலி மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி நுள்ளிவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய சூசை செபிக்க, காரங்காடு பங்குத்தந்தை அருட்பணி சுஜின் சிந்திக்க நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா நாட்களில் காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு அன்பியங்கள், பக்தசபைகள், இயக்கங்கள் நடத்தும் பொதுக்கூட்டம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 5 ம் நாள் மாலையில் நடக்கும் திருப்பலியில் துண்டத்துவிளை பங்குத்தந்தை அருட்பணி எக்கர்மன்ஸ் மைக்கேல் செபிக்க திரித்துவபுரம் வட்டார முதல்வர் அருட்பணி ஒய்சிலின் சேவியர் சிந்திக்க நடக்கிறது. 6 ம் நாள் மாலை திருப்பலியில் குலசேகரம் அருட்பணி பிறிம்மஸ் சிங் செபிக்க மணலிக்கரை அருட்பணி சுரேஷ்பாபு சிந்திக்க நடக்கிறது. 7 ம் நாள் மாலை திருப்பலி மறைமாவட்ட இளையோர் பணிக்குழு இயக்குநர் அருட்பணி ஆல்பின் ஜோஸ் செபிக்க மறைவட்ட இளையோர் பணிக்குழு இயக்குநர் அருட்பணி அஜின் ஜோஸ் சிந்திக்க நடக்கிறது. 8 ம் நாள் காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி செட்டிசார்விளை அருட்பணி பிரிதிவி தாமஸ் செபிக்க நடக்கிறது. மாலை திருப்பலி அம்பாசமுத்திரம் அருட்பணி அருள் அம்புரோசு செபிக்க கண்டன்விளை பங்குத்தந்தை அருட்பணி பெஞ்சமின் போஸ்கோ சிந்திக்க, மண்ணின் மைந்தர் அருட்பணி பிரான்சிஸ், சுங்கான்கடை அருட்பணி மரியவின்சென்ட் இணைந்து செபிக்க நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.9 ம் நாள் விழாவான மே மாதம் 2 ம் தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி பாளையங்கோட்டை மேனாள் மேதகு ஆயர் ஜூடு பால்ராஜ் செபிக்க நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் தூய சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் செபிக்க சிகரம் இயக்குனர் அருட்பணி செபாஸ்டின் சிந்திக்க, முளகுமூடு அருட்பணி ராபர்ட், அருட்பணி ஜோசப் காலின்ஸ் இணைந்து செபிக்க நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு முதல் திருப்பலி மண்ணின் மைந்தர் அருட்பணி பிரான்சிஸ் செபிக்க நடக்கிறது. 9 மணிக்கு ஆடம்பர பெருவிழா திருப்பலி புலியூர்குறிச்சி திருத்தல அதிபர் அருட்பணி ஜேசு ரெத்னம் செபிக்க இயேசுவை காண்போம் இயக்குனர் அருட்பணி ரபேல் சிந்திக்க நடக்கிறது. மாலை 4 மணிக்கு தேர்ப்பவனி, 5.30 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு கத்தோலிக்க சங்கம் நடித்து வழங்கும் புனித அருளானந்தம் நாடகம் நடக்கிறது. முன்னதாக ஏப்ரல் 20 மற்றும் 21 ம் தேதிகளில் மாலை 6 மணிக்கு நாங்குநேரி ஜெபமாலைத் தோட்டம் அருட்பணி குலசை பெலிக்ஸ் குழுவினர் வழி நடத்தும் நற்செய்தி பெருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள் , பங்கு அருட்பணி பேரவை, பங்குத்தந்தை அருட்பணி சேவியர் புரூஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் விஸ்வராஜ், செயலாளர் பேபி ஜாய், துணை செயலாளர் மரிய ஆல்பின் ராஜேஷ், பொருளாளர் லிற்றில் பிளவர் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.
அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்
