நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ஐஷ்வர்யா தலைமையில், மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் மற்றும் அங்கு உள்ள அடிப்படை வசதிகள் குறித்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள், பராமரிப்புப் பணிகள் மற்றும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.