தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் விழா நெய்யூர் வடக்கு தெருவில் வைத்து குமரி மாவட்ட அமைப்பு சாரா தொ.மு.ச துணைச் செயலாளர் முனைவர் ஜெபராஜ் தலைமையில்,
தலைமை கழக வழக்கறிஞர்
லிவிங்ஸ்டன், மாவட்ட பகுத்தறிவுக் கழக தலைவர் இரணியல் சிவதானு ஆகியோர்கள் முன்னிலையில்,
மாவட்ட கழக அவை தலைவரும் குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் ராஜரத்தினம் தந்தை பெரியாரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதையை செலுத்தி, இனிப்புகள் வழங்கி, வேட்டி, சட்டைகள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பகுத்தறிவுகழக செயலாளர் பெரியார்தாஸ்,
மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஜெகதீஸ்வரி, வழக்கறிஞர் அலெக்ஸ், வழக்கறிஞர் தெரஸ்நாதன் சைஜு,
மாவட்ட டாஸ்மாக் தொ.மு.ச துணைச் செயலாளர்
ரவிகுமார், பேரூராட்சி மன்ற உறுப்பினர் கவிதாராணி, ஒன்றிய கழக பிரதிநிதி ஜாலின்விஜுதாஸ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணைத் தலைவர்
இஸ்மாயில், தீபிகா,
கிளிட்டஸ் ரெவி, ஆல்வின் ரமேஷ்,
ராஜு, சரிதா, கிளாட்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.