நேரடி முகலர்கள் சேர்க்கை அறிவிப்பு

Share others

அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை அறிவிப்பு

மத்திய அரசின் அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு வணிகம் செய்ய நேரடி முகவராக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18 வயதுக்கு மேற்பட்ட பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்றோர் / சுய தொழில் புரிவோர் / முன்னாள் ராணுவத்தினர் / அங்கன்வாடி ஊழியர் / ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடி முகவராக தேர்ந்தெடுக்கப்படுவோர் செய்யும் வணிகத்திற்கேற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். குறிப்பாக, கல்லுரி மாணவர்கள் படித்துக் கொண்டே நேரடி முகவராக செயல்பட்டு ஊக்கத்தொகை பெறுவதற்கான ஓர் அரிய வாய்ப்பு.
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ரூ.5000 மதிப்புடைய என்எஸ்சி / கேவிபி சேமிப்புப் பத்திரக் கணக்கினை அஞ்சலகங்களில் தங்கள் பெயரில் தொடங்கி President of India பெயரில் ஈடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பி தரப்படும்.
தகுதி உள்ளவர்கள் விண்ணப்பங்களை தங்கள் அருகாமையில் உள்ள தலைமை / துணை அஞ்சலகங்களில் பெற்றுக் கொண்டு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், கன்னியாகுமரி கோட்டம், நாகர்கோவில் – 629 001 என்ற முகவரிக்கு 10.5.2026 -க்குள் அனுப்பி வைக்கவும்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்கள் 20.5.2026 அன்று பிற்பகல் 15:30 மணியளவில் அஞ்சலக கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகம், நாகர்கோவில் தலைமை அஞ்சலகம் (இரண்டாவது மாடி), நாகர்கோவிலில் நடைபெற உள்ள நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களை வளர்ச்சி அலுவலர் (9894774410) அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
இவ்வாறு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் தமது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *