கன்னியாகுமரி மாவட்டம் பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 13 ம் தேதி துவங்கி 17 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6 மணிக்கு முன்னோர் நினைவு சிறப்பு திருப்பலி கல்லறைத் தோட்டத்தில் வைத்து பங்குத்தந்தை அருட்பணி பெஞ்சமின் போஸ்கோ தலைமையில் நடந்தது. மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி அகமதாபாத் மறைமாவட்ட மேதகு ஆயர் அத்தனாசியுஸ் இரத்தினசாமி தலைமையில் நடந்தது. 6 அன்பிய இறை மக்கள் மற்றும் அன்பிய ஒருங்கிணையத்தார் சிறப்பித்தனர். இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 2 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி மயிலக்கோடு பங்குத்தந்தை அருள்பணி மரிய டேவிட் ஆன்றனி தலைமையில் பட்டரிவிளை பங்குத்தந்தை அருள்பணி பிறைட் சிங் அருளுரையோடு நடக்கிறது. திருத்தூது கழகங்களின் ஒருங்கிணையத்தார் மற்றும் அடித்தள முழு வளர்ச்சி சங்கம் சிறப்பிக்கின்றனர். இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி மண்ணின் மைந்தர்கள் தலைமையில் நடக்கிறது. கண்டன்விளை, சித்தன்தோப்பு, இரணியல் இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. 4 ம் நாள் விழாவான 16 ம் தேதி காலை 9 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி காரங்காடு மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ் தலைமையில் செட்டிச்சார்விளை பங்குத்தந்தை அருள்பணி பிருதிவி தாமஸ் அருளுரையோடு நடக்கிறது. முதல் திருவிருந்து பெறுவோர் மற்றும் மறைக்கல்வி மன்றத்தார் சிறப்பிக்கின்றனர். மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, திருப்பலி சுங்கான்கடை ஆன்மிக ஒருங்கிணைப்பாளர் அருள்பணி மரிய வின்சென்ட் தலைமையில் திரித்துவபுரம் பேராலய அதிபர் அருள்பணி அருளுரையோடு நடக்கிறது. மண்ணின் மகள்கள் , பீட சிறுவர்கள், பாடகர் குழு மற்றும் வழிபாட்டு குழு சிறப்பிக்கின்றனர். இரவு 8.30 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. 5 ம் நான் விழாவில் காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. பங்கு அருட்பணி பேரவை மற்றும் பண்டாரவிளை இறைமக்கள் சிறப்பிக்கின்றனர். மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கமும் இரவு 7.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருட்பணி பெஞ்சமின் போஸ்கோ, இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் அகஸ்டின், செயலாளர் ஜாண் பெஞ்சமின், துணை செயலாளர் கிளாட்சன், பொருளாளர் ஜோஸ்லின் ஷகிலா, பண்டாரவிளை பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவையினர் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.
பண்டாரவிளை புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
