மாதா பிறந்த நாள் தொடர் திருப்பலியில் ஏராளமானவர்கள் பங்கேற்பு முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி கில்பர்ட் லிங்சன் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறைமாவட்டத்தில் முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயம் உள்ளது. தென் தமிழகத்தில் பசிலிக்கா அந்தஸ்தை பெற்றது என்ற சிறப்புடைய இந்த ஆலயத்தில் திருவிழா செப்டம்பர் மாதம் 4 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மாதா பிறந்த நாள் விழா தொடர் திருப்பலி நடந்தது. காலை 7 மணி முதல் 8 மணி வரை சுவாமியார்மடம் புனித யூதா ததேயு திருத்தல பக்தர்கள், 8 முதல் 9 மணி வரை செட்டிச்சார்விளை பங்கு, 9 முதல் 10 மணி வரை காரங்காடு வட்டாரம், 10 முதல் 11 மணி வரை மாத்திரவிளை மற்றும் வேங்கோடு வட்டாரங்கள், 11 முதல் 12 மணி வரை மறைமாவட்ட கோல்பிங் இந்தியா இயக்கம் - பணிக்குழுவினர், மதியம் 12 முதல் 1 மணி வரை மரியாயின் சேனை திருத்துவபுரம், முளகுமூடு கொமித்சியம், 1 முதல் 2 மணி வரை மறைமாவட்ட இளைஞர் இயக்கம், கத்தோலிக்க சேவா சங்கம் - பணிக் குழுவினர், 2 முதல் 3 மணி வரை மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகம் - பணிக் குழுவினர், மாலை 3 முதல் 4 மணி வரை திருத்துவபுரம் வட்டாரம், 4 முதல் 5 மணி வரை புத்தன்கடை வட்டாரம், 5 முதல் 6 மணி வரை முளகுமூடு வட்டாரம். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, அன்னையின் தேர்பவனி ஆலயம் சுற்றி வருதல் நடந்தது. 6.40 மணிக்கு திருப்பலி முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி டேவிட் மைக்கிள் தலைமையில் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்பணி மரிய பாஸ்டின் துரை மறையுரையோடு நடந்தது. இரவு 8.30 மணிக்கு அன்பிய ஒருங்கிணையம் வழங்கும் ஆண்டுவிழா கலை நிகழ்வுகள் நடந்தது. இந்த தொடர் திருப்பலியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி கில்பர்ட் லிங்சன், இணை பங்குத்தந்தை அருட்பணி போபின், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் மரிய ஜாண் வரதராஜ்,
செயலாளர் அஜின் , துணைச் செயலாளர் ஐபர்ட் ராஜ் ,
பொருளாளர் ஜெயந்தி , பங்கு அருட்பணி பேரவை, பங்கு இறைமக்கள், இல்லத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் இணைந்து செய்து இருந்தனர்.