கன்னியாகுமரி மாவட்டம் முரசங்கோடு புனித கார்மல் மாதா ஆலய பங்கு குடும்ப விழா ஜூலை மாதம் 10 ம் தேதி முதல் 19 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6.15 மணிக்கு முன்னோர்களுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருக்கொடிபவனி, புகழ்மாலையும் 7 மணிக்கு திருக்கொடியேற்றம், கூட்டுத் திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர் பேரருள்பணி சேவியர் பெனடிக்ட் தலைமையில் களியக்காவிளை நாஞ்சில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருள்பணி ஸ்டீபன் மறையுரையோடு நடக்கிறது. 2 ம் நாள் விழாவில் காலை 6.15 மணிக்கு நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது. மாலை 5.45 மணிக்கு ஆயருக்கு வரவேற்பும், 6 மணிக்கு குடில் திட்ட வீடு மந்திரிப்பு நடக்கிறது. 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் 6.45 மணிக்கு திருப்பலி, புதிய பீடம் புனிதப்படுத்துதல் குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. சிறப்பு விருந்தினர்களாக காரங்காடு வட்டார குருக்கள் கலந்து கொள்கின்றனர். 3 ம் நாள் விழாவில் காலை 7.30 மணிக்கு ஜெபமாலை, 8 மணிக்கு திருப்பலி குழித்துறை மறைமாவட்ட நிதிபரிபாலகர் பேரருள்பணி ஜெயக்குமார் தலைமையில் பார்வதிபுரம் அறக்கட்டளை மருத்துவமனை அருள்பணி பெஞ்சமின் மறையுரையோடு நடக்கிறது. சிறப்பு நிகழ்வாக நற்கருணை ஆராதனையும் மதியம் 3 மணிக்கு பொது ஆராதனை, மாலை 4 மணிக்கு சிறப்பு நற்கருணை வழிபாடு, 5 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் ஒத்திகையும் நடக்கிறது. விழா நாட்களில் காலையில் திருப்பலியும் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு ஆலயத்தை சுற்றி ஜெபமாலை பவனி, புகழ்மாலையும், 6.30 மணிக்கு திருப்பலியும் நடக்கிறது. இரவு 8 மணிக்கு வாகனங்கள் மந்திரித்தல், 9 மணிக்கு சங்கம இரவும் நடக்கிறது. 8 ம் நாள் விழாவான 17 ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை முதல் திருவிருந்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தியானம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருப்பலி காரங்காடு வட்டார முதன்மை பணியாளர் பேரருள்பணி சகாய ஜஸ்டஸ் தலைமையில் காரங்காடு பங்குத்தந்தை அருள்பணி சுஜின் மறையுரையோடு நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்பிய இரவு நடக்கிறது. 9ம் நாள் விழாவில் காலை 7.15 மணிக்கு ஜெபமாலை 8 மணிக்கு திருமுழுக்கு மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை அருள்பணி பென்னி தலைமையில் முக்கலம்பாடு இணை பங்குத்தந்தை அஸ்வின் பால் மறையுரையோடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 6.30 மணிக்கு திருப்பலி குழித்துறை மறை மாவட்ட செயலர் பேரருள்பணி அந்தோணி முத்து தலைமையில் வெட்டுவெந்தி திருத்தல அதிபர் அருள்பணி சகாய தாஸ் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8 .45 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்ப்பவனி நடக்கிறது. 10 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு விழா திருப்பலி முரசங்கோடு இணை பங்குத்தந்தை டேனியல் ஆபிரகாம் தலைமையில் நடக்கிறது. 8:30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி கோட்டாறு மறை மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருள்பணி ஜோசப் அருள் ஸ்டாலின் தலைமையில் கோட்டாறு மறை மாவட்ட களரி மையம் அருள்பணி சகாய பெலிக்ஸ் மறையுரையோடு நடக்கிறது. திருப்பலி நிறைவில் திருக்கொடியிறக்கம் தொடர்ந்து அன்பு விருந்தும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்றம் வழங்கும் மாபெரும் மறை இரவு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்சகோதரிகள், பங்கு அருள்பணி பேரவை, பங்குத்தந்தை அருள்பணி அமலதாஸ், இணை பங்குத்தந்தை அருள்பணி டேனியல் ஆபிரகாம் ஆகியோர் செய்து உள்ளனர்.