வடசேரி உழவர் சந்தையில் இயற்கை வேளாண் அங்காடியை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் துவக்கி வைத்தார்

Share others


நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடியினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்   துவக்கி வைத்து, பார்வையிட்டு தகவல்.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடியினை மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்  துவக்கி வைத்து, பார்வையிட்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, விவசாயிகளின் விளைபொருட்களைச் சந்தைப்படுத்தவும், இயற்கை சார்ந்த விவசாயத்தை ஊக்கப்படுத்தவும் பல்வேறு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பண்டைய காலங்களில் மனிதன் இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை உண்டு நோய் நொடியின்றி அதிக காலம் வாழ்ந்து வந்தான். அப்போது விளைவிக்கப்படும் விவசாய பயிர்களுக்கு மாடு ஆடு போன்ற கால்நடைகளின்  சாணம், தழை போன்ற இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்டன. நவீன காலத்தில் இயற்கை உணவுகளை அனைவரும் பயன்படுத்தி நோயின்றி வாழ வேளாண்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்ஒருபகுதியாக, இன்று முதல் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமைகளில் வடசேரி உழவர் சந்தையில் 'ஆர்கானிக் பார்ம்' எனப்படும் இயற்கை வேளாண் அங்காடி செயல்படும். இன்று தொடங்கப்பட்ட இயற்கை அங்காடியில் இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், தேன், தேங்காய், தூய மல்லி, கட்டி சம்பா உள்ளிட்ட  பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை உரங்கள் மண்புழு உரம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், மட்டி பழம் உள்ளிட்ட வாழைப்பழ வகைகள், பலா பழங்கள் மேலும் கண்களை கவரும் பூச்செடிகள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. சுமார் 80 விவசாயிகள் தங்கள் இயற்கை விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்து உள்ளனர். இது ஒரு தொடக்கம் மட்டுமே வரும் நாட்களில் இந்த சந்தையை இன்னும் சிறப்பாக மேம்படுத்தி, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம்.
 	பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி இயற்கை பொருட்களை வாங்கும் வகையில், அவற்றுக்கு உரிய சான்றிதழ்  பெற்றுத் தர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒரே இடத்தில் பல்வேறு இயற்கை விளைபொருட்கள் கிடைப்பதால், மக்கள் எளிதாக ஒப்பீடு செய்து தரமான பொருட்களைத் தேர்வு செய்ய முடியும். இது விவசாயிகளுக்கு ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, அவர்களின் தயாரிப்புகளை மேம்படுத்த உதவும். மேலும், நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் 'மாடித்தோட்டங்களை' அமைப்பதை ஊக்குவித்து வருகிறோம். இது குப்பைக் கழிவுகளைக் குறைக்கவும் உதவும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் தெரிவித்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, வேளாண்துறை இணை இயக்குனர் வாணி, மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை கீதா,  வேளாண் வணிகத்துறை  துணை இயக்குனர் ஜோஸ், மாவட்ட விற்பனைக்குழு செயலாளர் விஷ்ணப்பன், திருப்பதிசாரம் அறிவியல் மைய தலைவர் சுரேஷ், விதை சான்று வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்,  வேளாண் அலுவலர் சங்கரநாராயணன், விவசாய பிரதிநிதிகள் செண்பகசேகர் பிள்ளை, கருணாநிதி, விஜி, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *