
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளிகள் நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 169 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

/பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கிள்ளியூர் வட்டம் மெதுகும்மல் கிராமம் சூரிய கோடு கிராமத்தை சேர்ந்த நிதின் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக ஒரு லட்சத்திற்கான காசோலையினை அன்னாரது தந்தை ரவு அவர்களுக்கும் கிள்ளியூர் வட்டம் இனயம் புத்தன்துறை கிராமம் ஹெலன் நகரை சார்ந்த சுஜின் ராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்காக ஒரு லட்சத்திற்கான காசோலையை அன்னாரது தந்தை ஏசுதாசன் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.