
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்த நாள் மற்றும் 61-வது குருபூஜை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சட்டம் ஒழுங்கினை பராமரிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், இளையான்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வருகின்ற 30.10.2023 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.