கலைஞர் மகளிர் உரிமைத் தொகை

Share others

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 15 ம் தேதி துவங்கி வைத்தார். இந்த திட்டத்தில் தகுதியானவர்களுக்கு தங்களுடைய வங்கி கணக்கில் ரூ. 1000 வந்ததை அடுத்து பணத்தை எடுத்துக் கொண்ட மகளிர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவி வருகிறது. அதேநேரத்தில் எந்தவிதமான குருஞ்செய்தியும் வரமால் இருக்கும் பெண்கள் மத்தியில் கடுமையான அதிருப்தி நிலவி வருகிறது. எதற்காக தங்களுடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் குருஞ்செய்திகள் மூலம் தங்களுடைய செல்போன்களில் வரும் என்று 15 ம் தேதி முதல் தொடர்ந்து செல்போன்களில் பார்த்து வருகின்றனர். தற்போது இ சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்க முடியுமா என்று தங்களுடைய ஆவணங்களுடன் வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *