தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அடுத்த கூட்டத்தை 2023 ஆண்டு அக்டோபர் மாதம் 9 ம் தேதி காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் கூட்டி உள்ளார். மேலும் அன்று 2023-2024 ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் ( முதல்) பேரவைக்கு அளிக்கப்பெறும்.