வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் கிறிஸ்துமஸ் விழா ஆலோசனை

Share others

வில்லுக்குறி வட்டார கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் ஆலோசனை கூட்டம் வில்லுக்குறி எழில் திருமண மண்டபத்தில் வைத்து தலைவர் ஜாண் பேட்ரிக் தலைமையில் நடந்தது. செயலாளர் ஜஸ்டின், பொருளாளர் தாவீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ராஜமணி, உறுப்பினர்கள் ஜோசப் பிராங்கிளின், பவுல் ராஜ், சூசை மிக்கேல், ஜூடு, சசி, சார்லஸ், ஷாஜின், லீனூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கிறிஸ்மஸ் விழா வரும் டிசம்பர் மாதம் 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2 மணி முதல் நடத்துவது எனவும் வில்லுக்குறி குருசடி சந்திப்பில் இருந்து கிறிஸ்துமஸ் பேரணி துவங்குவது எனவும் கிறிஸ்மஸ் கேக் வெட்டி கொண்டாட சினிமா நடிகை கீர்த்தி சுரேஷ்யை அழைப்பது என்பதும் அனைத்து அரசியல் தலைவர்களையும் , மத போதகர்களையும் அழைப்பதுஉட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *