காவல்துறை சார்பில் பாராட்டு விழா

Share others

விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அதிகாரிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி பணியில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட காவல்துறை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் ஆகியோர் தலைமை வகித்தனர்.
காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் , காவல் துணை கண்காணிப்பாளர்கள் , காவல் ஆய்வாளர்கள் மற்றும் தனிப்பிரிவு போலீசார், வருவாய் துறை அதிகாரிகள், தீயணைப்பு படை அதிகாரிகள் ,ஊர் காவல் படை அதிகாரிகள் ஆகியோர்கள்
விநாயகர் சதுர்த்தி பணியின் போது சிறப்பாக பணியாற்றி எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் , அமைதியான முறையில் நடைபெற காரணமாக இருந்த அனைத்து துறை அதிகாரிகளையும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தந்த அனைத்து மத இயக்க நண்பர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *