வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை

Share others

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கன மழையில் தண்ணீரை கொட்டி தீர்த்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர்ந்து சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் கடந்த 5 நாட்களாக மழை குறைந்த நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. இந்நிலையில் இன்று காலையில் இருந்தே வில்லுக்குறி சுற்று வட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட மேகம் 11 மணிக்கு மேல் மழையாக பெய்ய துவங்கியது 11.45 மணிக்கு மேல் கடும் மழையாக பெய்து தண்ணீரை கொட்டி தீர்த்தது. இதனால் சாலை ஓரங்களில் தண்ணீர் ஆறு போல் ஓடியது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *