கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கவாத்தில் கலந்துகொண்டு, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆயுதப்படை காவலர்களிடம் குறைகளை நேரில் கேட்டறிந்து, அவர்களின் குறைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை பார்வையிட்டார். ஆயுதப்படை வளாகத்தில் அமைந்திருக்கும் காவலர் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்கும் படி அறிவுரை வழங்கினார். இதில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவீன்குமார் மற்றும் ஆயுதப்படை ஆய்வாளர் சுஜாதா ஆகியோர் உடனிருந்தனர்.