வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம்

Share others

சிவகங்கை மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி  வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித், வெளியிட்டார் . அதனை தொடர்ந்து 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் / முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் குறிப்பிட்ட நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி, 04.11.2023 (சனிக்கிழமை), 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை)  மற்றும் 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது.

     மேற்படி, சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும் மற்றும் இணையதள வழியாகவும் ( ஓட்டஸ் ஹெல்ப் லைன் செயலி / https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.gov.in) விண்ணப்பிக்கலாம்.

       மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிட்ட கால அட்டவணையின்படி 27.10.2023 முதல் 09.12.2023 வரையிலான நாட்களில் வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை / தேவகோட்டை ஆகிய அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்  அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

      எனவே, இந்த வாய்ப்பினைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்  ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *