திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம்

Share others

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சி சார்பில் திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திங்கள்நகர் காமராஜர் பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமை வகித்து கண்டன உரை ஆற்றினார். நிர்வாகிகள் சுசீலா, கார்மல், அர்ஜுனன், செல்வராஜ், விசிக நிர்வாகிகள் ஆல்காலித், பிரைட், தமுமுக நிர்வாகிகள் சுல்பீக்கர், சுலைமான், சபீர்அலி, மமக நிர்வாகி சகாப்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர். விசிக நிர்வாகி கோட்டாறு யூசுப் நன்றி கூறினார். விசிக நிர்வாகி சிராஜியுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *