பேயன்குழி முத்தாரம்மன் திருக்கோயில் பஜனை பட்டாபிஷேக திருவிழா

Share others

கன்னியாகுமரி மாவட்டம் பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் 145 வது பஜனை பட்டாபிஷேக திருவிழா ஜனவரி மாதம் 1 ம் தேதி துவங்கி 5 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 4 மணிக்கு மங்கள இசை, 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5 மணிக்கு மஹா கணபதி ஹோமம், 6.30 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 9 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை, 11 மணிக்கு ஸ்ரீ கைலாசநாதருக்கு இளநீர் அபிஷேகம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு சிறப்பு பஜனை, 6 மணிக்கு பேயன்குழி அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் திருவிளக்கு வழிபாட்டு மன்றம் மற்றும் விவேகானந்தா கேந்திரம் இணைந்து நடத்தும் 54 வது 1008 திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு ஆன்மீகப் பேருரை, 9.30 மணிக்கு திருவிளக்கு பூஜை ஒழுங்கு பரிசு வழங்குதல், 10 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. 2 ம் நாள் விழாவில் காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி,6 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு லட்சார்ச்சனை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகம், 5 மணிக்கு 32 வது ஆண்டு சிவலிங்க பூஜை, இரவு 7.30 மணிக்கு பட்டிமன்றம், 9.30 மணிக்கு பரிசு வழங்குதல், 10 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. 3 ம் நாள் விழாவில் காலை 6 மணிக்கு அபிஷேகம், பவுர்ணமி மன்றம், 8 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு சுமங்கலி பூஜை, மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5.30 மணிக்கு 16 வது பவுர்ணமி பூஜை, இரவு 7.30 மணிக்கு புராண நாட்டிய நாடகம், 10.30 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6.30 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ மாணவியருக்கான பேச்சு போட்டியும், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு மகளிர் பவுர்ணமி பூஜை குழுவினரின் பஜனை, 7 மணிக்கு பக்தி இன்னிசை, இரவு 10 மணிக்கு தீபாராதனையும் நடக்கிறது. 5 ம் நாள் விழாவான ஜனவரி மாதம் 5 ம் தேதி காலை 6.30 மணிக்கு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 8.30 மணிக்கு ராகுகால துர்கா பூஜை மன்றம் நடத்தும் 24 வது ராகுகால துர்கா பூஜை, 10 மணிக்கு அம்மனுக்கு பொங்கலிடுதல், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய சந்தனம், பால், பன்னீர், தேன், களபம் குடங்களில் பேயன்குழி பிள்ளையார் கோயிலில் இருந்து அம்மன் சன்னதி வரை எடுத்து வரும் அலங்கார யானைகளின் மாபெரும் ஊர்வலம் நடக்கிறது. 6 மணிக்கு அம்மனுக்கு மஹா அபிஷேகம், இரவு 7 மணிக்கு மாபெரும் நாதஸ்வர கச்சேரி, 9 மணிக்கு விழா தொகுப்பு நன்றியுரை, 10 மணிக்கு பொய்க்கால் குதிரை விளையாட்டு, 10.30 மணிக்கு மஹா தீபாராதனை தொடர்ந்து பஜனை, நாதஸ்வர கச்சேரி, பொய்க்கால் குதிரை, வாணவேடிக்கை இவைகளுடன் அலங்கார யானைகள் வலம் வர அம்மன் பவனி வருதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தலைவர் சோமசுந்தரம், துணைத் தலைவர் சிலம்பரசன், செயலாளர் ஜெயசிங், பொருளாளர் முருகன் ஆகியோர் இணைந்து செய்து உள்ளனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *