ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளை வெள்ளி விழா

Share others

ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளை வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மற்றும் வெள்ளி விழா அக்டோபர் மாதம்  2 ம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வில்லுக்குறி வடக்கு மேலப்பாறை அருட்குரு இடைக்காடர் சித்தர் ஞானபீட பிரார்த்தனை கூடத்தில் வைத்து நடக்கிறது. காலை 9:30 மணிக்கு பங்குதாரர் வருகை பதிவும், தொடர்ந்து  ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் திருவிடைக்கோடு  அமரர் ஸ்ரீ பத்மநாபன் நாயரின் திருவுருவ படத்தை வில்லுக்குறி கிளை இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் மேலாளர் விச்சு திறந்து வைக்கிறார். 10:30 மணிக்கு பொதுக்குழு கூட்டமும் நடக்கிறது. பொதுக்குழு கூட்டத்தில் ஆண்டறிக்கை சமர்ப்பித்தல், வரவு செலவு அறிக்கை தாக்கல், அறக்கட்டளை வளர்ச்சி குறித்த ஆலோசனையும் நடக்கிறது. தொடர்ந்து வெள்ளி விழா சிறப்பு கூட்டம் மதியம் 12 மணிக்கு  தலைவர் மாதங்கி மணிகண்டன் தலைமையில் நடக்கிறது. பொதுச்செயலாளர் செந்தில்குமார் வரவேற்கிறார். முன்னாள் தலைவர் சதாசிவன் வெள்ளி விழா மலர் வெளியிட  பெரும்செல்வவிளை தாணுபிள்ளை வெள்ளி விழா மலரை பெற்றுக் கொள்கிறார். சிறப்பு சொற்பொழிவு வாழ்த்துரை பேராசிரியர் முனைவர் செல்வகதீஸ்வரன்,  நாஞ்சில் நாவரசு செல்ல கண்ணன் ஆகியோர் வழங்குகின்றனர். உதவி தலைவர் செல்வம் நன்றி கூறுகிறார். ஒரு மணிக்கு விருந்து உபசரணை நடக்கிறது. இடைக்காடர் சித்தர் ஞானபீடம் வருகை தர வில்லுக்குறி பாலம் சமீபத்தில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டு உள்ளது. பங்குத்தாரர்கள் அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர் மாதங்கி மணிகண்டன் தெரிவித்து உள்ளார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *