தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நுள்ளிவிளை, மருதூர்குறிச்சி மற்றும் திக்கணங்கோடு ஊராட்சிகளை பேரூராட்சியாக மாற்றும் நடவடிக்கைகளை கைவிட கேட்டு தக்கலை ஊராட்சி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தக்கலையில் முத்தலக்குறிச்சி ஊராட்சி தலைவர் சிம்சன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சடையமங்கலம் ஊராட்சி தலைவர் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். இதில் குமரி மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் நல அமைப்பு தலைவர் அஜித்குமார், சட்ட ஆலோசகர் பால்ராஜ் உட்பட பலர் பேசினார்கள். தக்கலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.