சிவகங்கை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலிப்பதவியிடங்களுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார்(ஓ) , சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்திற்கு வருகை புரிந்து, தேர்தல்கள் நடைபெற உள்ள வாக்குச்சாவடி மையங்களின் விவரம், ஊரக உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் இருப்பு விவரம், நகர்ப்புற உள்ளாட்சி தற்செயல் நேரடித் தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் இருப்பு விவரம், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் வாக்குச்சாவடி பொருட்கள் இருப்பு விவரம் மற்றும் நிலுவையிலுள்ள தேர்தல் வழக்குகளின் தற்போதய நிலை குறித்த விவரம் உட்பட தேர்தல் நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகள் குறித்த பணிகளின் விவரங்களை சிவகங்கை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித்துடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அன்பு மற்றும் அலுவலக மேலளார் (வளர்ச்சி) பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.