பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆலோசனைபடி பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அதன்படி கிரிக்கெட் மேட்ச் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் நடைபயிற்சி மூலமாகவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் அரசு போக்குவரத்து கழக உதவி மேலாளர் ஜெரோலின் தலைமையில் விழிப்புணர்வுகள் நடந்தது.