தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப் பணியாளர் சங்கம் கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் முப்பெரும் விழா நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி எதிரில் உள்ள ஆலன் நினைவு ஹாலில் வைத்து மாவட்ட தலைவர் ஜாஸ்பர் ஆஸ்டின் தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வகுமார், சரஸ்வதி, கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி செயலாளர் லீலா வரவேற்றார். தீர்மானங்களை மாவட்ட தலைவர் ஜாஸ்பர் ஆஸ்டின், செயலாளர் மாஹின் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாநில துணைத் தலைவர்கள் திலகர், நந்தகுமார், தலைமை நிலைச் செயலர் எட்வின் பால், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் கோபிநாதன், தமிழ்நாடு தனியார் பள்ளி அலுவலகப் பணியாளர் சங்க மாநில துணை செயலாளர் ஆல்பர்ட் ராஜ், மாநில துணைத் தலைவர் நம்பிராஜன், மாநில இணை செயலாளர் கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில பொருளாளர் துரை பாண்டி, மாநில பொதுச் செயலாளர் இராஜராஜன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்.மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் விழா பேருரை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கவுதமன் நன்றி கூறினார்.