கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24- 8 -2023 வியாழக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடக்கிறது. மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஜூலை 2023 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும் . மேலும் விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் மாவட்ட ஆட்சியாளரால் நேரில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டிருக்கும். மாவட்ட ஆட்சியாளரிடம் நேரடியாக தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.