
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் நிலையான கண்காணிப்பு படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டுவருவதை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் நிலையான கண்காணிப்பு படையினர் வாகன சோதனையில் ஈட்டுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-

/
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பண்டாரபுரம் விலக்கு, ஆரல்வாய்மொழி, வழுக்கம்பாறை ஆகிய பகுதியில் வாகன சோதனையில் தேர்தல் நிலையான கண்காணிப்பு படையினர் ஈடுப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் விதம், ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் வீடியோ பதிவு செய்யப்படுவது உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சோதனையின் போது கைப்பற்றப்படும் பொருட்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய பணப் புழக்கம் குறித்து பராமரிக்கப்படும் பதிவேடுகள் ஆய்வு மேற்கொண்டு, சரியான முறையில் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை குழுவினர்களால் 15.3.2026 பி.ப 4 மணி முதல் 3.4.2026 மு.ப 6 மணி வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.48,23,880 தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய வகையில் கைப்பற்றப்பட்டு உள்ளது.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், அதேசமயம் தேர்தல் விதிமீறல்கள் நடைபெறாத வண்ணமும் மிகுந்த கவனத்துடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
