கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவின் தொடக்க விழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார்
ஆலய வளாகத்தில் இருந்து குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடந்தது. தொடக்க இறைவழிபாட்டுக்கு பின் அறிவொளி தீபத்தை குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் ஏற்றி வைத்தார். முன்னாள் மாணவர் இந்திய விமானப்படை ஓய்வு குரூப் கேப்டன் எட்வர்டு அறிவொளி தீபத்தை பெறுக்கொண்டு தீபத்தை முன்னாள் மாணவர்கள் ஏந்தி இசை வாத்தியங்களுடன் பவனியாக புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளிக்கு கொண்டு வரப்பட்டு பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் பெற்றுக்கொண்டு தீபத் தூணில் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை புனித அன்னாள் சபை தலைமை அன்னை அருட்சகோதரி கிளாரா வசந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முளகுமூடு மறைவட்ட முதன்மை பணியாளர் பேரருள்பணி டேவிட் மைக்கிள், மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன், இணை பங்குத்தந்தை அருட்பணி ஜேம்ஸ், தஞ்சை மாநிலத் தலைவி அருட்சகோதரி அக்ஸிலியா ஜெயந்தி, இல்லத் தலைவி அருட்சகோதரி லில்லி புஷ்பம், புலியூர்குறிச்சி திருத்தல அதிபர் அருட்தந்தை இயேசு ரெத்தினம், சுங்கான்கடை பொன்மலை அருட்பணி மரிய வின்சென்ட், புனித சேவியர் கத்தோலிக்க நர்சிங் கல்லூரி தாளாளர் அருட்பணி டோமினிக் சாவியோ, கொன்னக்குழிவிளை பங்குத்தந்தை அருட்பணி ஜியோ, அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி சேவியர் புரூஸ் மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பலி புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி கலையரங்கத்தில் வைத்து நடந்தது. இதன் தொடர்ச்சியாக பள்ளியில் படிக்கும் மாணவர்களால் நூற்றாண்டு விழா பாடல் மற்றும் நடனம் நிகழ்த்தப்பட்டது. பின்னர் விருந்தினர்களை கவுரவிப்பும் அதை தொடர்ந்து நூற்றாண்டு விழா மலரை குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் வெளியிட சென்னை புனித அன்னாள் சபை தலைமை அன்னை அருட்சகோதரி கிளாரா வசந்தி பெற்றுக் கொண்டார். மாணவ மாணவிகளின் நினைவு பதிவு புத்தகத்தை தஞ்சை மாநில தலைவி அருட்சகோதரி அக்ஸிலியா ஜெயந்தி வெளியிட பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி செல்வி பெற்றுக் கொண்டார். கவிஞர் எஸ்எம் செபாஸ்டின் எழுதிய குறள் நூறு புத்தகத்தை முளகுமூடு வட்டார முதன்மை பணியாளர் பேரருட்பணி டேவிட் மைக்கிள் வெளியிட பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன் பெற்றுக் கொண்டார். பள்ளியின் முதல் தலைமை ஆசிரியர் மரியகண் குடும்பத்தினர் கல்வி உதவித்தொகையாக ரூ. ஒரு லட்சம் அன்பளிப்பு அளித்தனர். முன்னாள் மாணவர் ஆல்ஜின் பள்ளிக்கு கம்பியூட்டரை அன்பளிப்பாக வழங்கியதை பள்ளி ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டனர். நூற்றாண்டு விழா நினைவாக மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் மரக்கன்று நட்டார். மாலையில் முக்கிய விருந்தினர்கள் கல்வியாளர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு
வட்டார கல்வி அலுவலர் ஹரி குமார் தலைமை வகித்தார்.
மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய ராஜேந்திரன், குருந்தன்கோடு வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஜாண்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து இறைவணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து, ஒளியேற்றல், அறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி செல்வி சமர்ப்பித்தார். மாடத்தட்டுவிளை இணை பங்குத்தந்தை அருட்பணி ஜேம்ஸ், குருந்தன்கோடு வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநர் லதா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சுவாமி தாஸ், முன்னாள் மாணவர் மற்றும் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை குரூப் கேப்டன் எட்வர்டு, பெற்றோர் ஆசிரிய சங்க தலைவி ஜார்லின் ஜெயின்சி, ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவர் ஜோஸ்வால்ட்டின், ஓய்வு பெற்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் எட்வர்டு அமல்ராஜ், ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் முனைவர் பீட்டர் அமலதாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். குளச்சல் வட்டார கல்வி அலுவலர் (பொ) சுப்பையா, குளச்சல் வட்டார தலைமை ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுசீலா, பொருளாளர் வர்க்கீஸ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை பிறீடா, கடியப்பட்டணம் பீட்டர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா, மனவிளை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சுந்தர மூர்த்தி, முன்னாள் தலைமை ஆசிரியை அருட்சகோதரி கரோலின், புதூர் புனித லூசியாள் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி நேத்ரா மற்றும் அருட்சகோதரிகள், முன்னாள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நூற்றாண்டு விழா சிறப்பு கலை நிகழ்ச்சிகளும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. ஆசிரியை ஜோஸ்பின் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர்கள் சுசி ஜாக்குலின், மேரி ஸ்டெல்லா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். விழா ஏற்பாடுகளை தாளாளர் , தலைமை ஆசிரியை, இல்லத்தலைவி, அருட்சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், விழா குழுவினர் இணைந்து செய்து இருந்தனர்.
மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
