தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான ஜோசப் விஜய்யின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும் கழக பொதுச் செயலாளர் ஆனந்த் ஆணைக்கிணங்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வழிகாட்டுதல் படி நாகர்கோவில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, நாகர்கோவில் டாக்டர் பினோஸ் மல்டி ஸ்பெஷலிஸ்ட் கிளினிக் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக தொழிலாளர்கள் இணைந்து நடத்திய இலவச கண், பல் மற்றும் பொது மருத்துவ முகாம் வில்லுக்குறி பாலம் சமீபம் உள்ள சரல்விளை காமராஜர் படிப்பகத்தில் வைத்து நடந்தது. இந்த முகாமுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக தொழிலாளர் அசிலர் தலைமை வகித்தார். குருந்தன்கோடு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெப்பின், வில்லுக்குறி பேரூர் செயலாளர் அஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார். மகளிரணி ஹெப்சி பாய், இளைஞரணி சிவா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் கன்னியாகுமரி மாவட்டம் தமிழக வெற்றிக் கழக தொழிலாளர்கள் ஜான்சன், ஜாண் , ராஜீவ், கிங்சிலி மோசஸ், ஜாண், செந்தில் குமார், எட்வின் ஜெயசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் கிட்டப்பார்வை, தூரப் பார்வை, வெள்ளெழுத்து, கண்களில் சீழ் வடிதல், அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள், சர்க்கரை நோய், கண்புரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாறுகண் உள்ள குழந்தைகள், மூச்சு திணறல், நெஞ்சு வலி, தலைவலி, ரத்த அழுத்தம், நுரையீரல் சம்பந்தமான நோய்கள், சர்க்கரை நோய், சிறுநீரக நோய்கள், இருதய நோய்கள், பக்கவாதம், மூளை காய்ச்சல், கல்லீரல் சம்பந்தமான நோய்கள், ரத்த அழுத்த அளவு, ரத்தத்தில் சர்க்கரை அளவு போன்ற நோய்களுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.