திருநெல்வேலி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு
இயந்திரங்கள் சேமிப்பு கிட்டங்கியில் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தேவையான
வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்க்கும் பணிகளை பெல் நிறுவன
பொறியாளர்கள் மேற்கொள்ளப்பட உள்ளதை மாவட்ட ஆட்சியாளர்
ஆனந்த் மோகன் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல்
கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியாளர் ஆனந்த் மோகன் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது:-
/
திருநெல்வேலி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில், நடந்து
முடிந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் பயன்படுத்தாத 2960 மின்னணு வாக்குபதிவு
இயந்திரங்கள் கையிருப்பில் உள்ளன. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில்
321 வாக்குசாவடிகள் உள்ளன. இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின்
வழிகாட்டுதலின் படி, 200 சதவீதம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்த்து தயார் நிலையில்
வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 321
வாக்குசாவடிகளுக்கு 200 சதவீதம் கணக்கீட்டின்படி 626 வாக்குப்பதிவு இயந்திரங்கள்,
626 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 626 வாக்குப்பதிவை சரிப்பார்க்கும் இயந்திரங்கள் என
மொத்தம் 1878 வாக்குப்பதிவு இயந்திரங்களில் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள்
மேற்கொள்வதற்காக, பாரத் எலக்ட்ரானிஸ் லிமிடெட் (பெங்களூரு) அரசு பொதுத்துறை
நிறுவன 6 பொறியாளர்கள் வருகை தந்து உள்ளனர். இந்த பணிகள் இன்று தொடங்கி 23.6.2026
வரை நடைபெறும் என
மாவட்ட ஆட்சியாளர்
ஆனந்த் மோகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் போது நதிநீர் இணைப்பு மாவட்ட வருவாய் அலுவலர்
மாரிச்செல்வி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)
சுப்பிரமணியன் , தேர்தல் வட்டாட்சியர் முருகன் ,
அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் குமார் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள்,
அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.