சர்வதேச அஞ்சல் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்த அஞ்சல் துறை அழைப்பு
இந்திய அஞ்சல் துறை மூலம் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும், விரைவாகவும் அஞ்சல்கள் மற்றும் பார்சல்களை அனுப்பும் சர்வதேச அஞ்சல் சேவைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்கள், மாணவர்கள், தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் ஆகியோர் தங்களது தேவைக்கேற்ப International சர்வதேச விமானப் பார்சல், சர்வதேச பதிவு செய்யப்பட்ட கடிதம், சர்வதேச விரைவு அஞ்சல் சரக்கு மற்றும் சர்வதேச கண்காணிக்கப்பட்ட பொதி போன்ற சேவைகளைப் பயன்படுத்தி ஆவணங்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் வணிகப் பொருட்களை வெளிநாடுகளுக்கு எளிதாக அனுப்பலாம்.
இந்த சேவைகள் நியாயமான கட்டணத்தில்,பாதுகாப்பான கையாளுதல், டிராக்கிங் வசதி மற்றும் விரைவான விநியோகத்துடன் வழங்கப்படுகின்றன.
சர்வதேச அஞ்சல் சேவை வசதி தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களிலும் உள்ளது.
எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்திய அஞ்சல் துறையின் சர்வதேச அஞ்சல் சேவைகளை முழுமையாகப் பயன்படுத்தி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்து உள்ளார்.