முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு உள்ள உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டமானது மாவட்ட ஆட்சியாளர் தலைமையின் கீழ் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் 15.7.2026 அன்று காலை 9 மணிக்கு துவங்கி மறுநாள் 16.7.2026 காலை 9 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களும், வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்திடுவர். மேலும், மாவட்ட ஆட்சியாளர் 15.7.2026 அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். எனவே அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் கேட்டுக்கொள்கிறார்.