மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவில் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 25-7-2026 சனிக்கிழமை அன்று நாகர்கோவில் பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் வைத்து நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படிப்பு போன்ற கல்வித்தகுதி உடைய வேலைநாடுநர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் தனியார் நிறுவனங்கள் தங்களது பணிக்காலியிடங்கள் தொடர்பான விவரங்களை jobfairdeonagercoil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுகொள்ளப்படுகிறீர்கள். தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும். உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் பெறப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளமுடியும் எனவும், இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளன்று பதிவு செய்யாமல் வரும் வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள இயலாது என்ற விவரமும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய சமூகவலைதளமான டெலிகிராம் சேனல் வேலை வாய்ப்பு அலுவலகம் நாகர்கோவில் என்ற குழுவில் தங்களை இணைத்து கொள்ளுமாறும் மற்றும் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் தமிழ்நாடு தனியார் வேலைவாய்ப்பு இணையதளம் (www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே, இந்த சேவையை பொதுமக்களும், நிறுவனங்களும் பயன்படுத்தி இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப் தெரிவித்துக் கொள்கிறார்.