உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Share others

ஸ்ரீ நாராயண குருவின் பிறந்த தினத்தை (ஆவணி சதயம்) முன்னிட்டு 28.8.2026 (வெள்ளிக் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
  28.8.2026 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2026 செப்டம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (12.9.2026) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டம் 1881 -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 28.8.2026 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் பிரதாப்  உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *