கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள ஆரோக்கியபுரம் சர்ச் அருகில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜோஷி. இவர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் உணவில் காய்கறி வகைகளை பயன்படுத்துவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவில் காய்கறி வகைகளை பயன்படுத்தி விட்டு அதில் வரும் விதைகள், தோல்கள் போன்ற உணவில் பயன்படுத்த முடியாத கழிவுகளை குப்பையில் வீசுவதை வழக்கமாக கொண்டு உள்ளார். இப்படி வீசி எறிந்த குப்பையில் இருந்த விதை ஒன்று வளர்ந்து காய்க்க துவங்கியது. இதை பார்த்த ஜோஷிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த ஆச்சரியத்தை அருகில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறார். இதில் இருந்து குப்பை என்று வீசியது நூற்றுக்கு மேற்பட்ட ரூபாய் மதிப்பில் கும்பளங்காயாக காய்த்து பலன் கொடுத்து வருகிறது.