கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறைமாவட்டத்தில் முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா ஆலயம் உள்ளது. தென் தமிழகத்தில் பசிலிக்கா அந்தஸ்தை பெற்றது என்ற சிறப்புடைய இந்த ஆலயத்தில் திருவிழா செப்டம்பர் மாதம் 4 ம் தேதி முதல் 13 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாள் காலை 6.15 மணிக்கு திருப்பலி இல்லத் தந்தையர்கள் தலைமையில் நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, அன்னையின் திருஉருவம் திறப்பு, அர்ச்சிப்பு, திருக்கொடியேற்றம், திருப்பலி குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடக்கிறது. முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி டேவிட் மைக்கிள், மேனாள் பங்குத்தந்தை அருட்பணி டோமினிக் கடாட்ச தாஸ், மறைமாவட்டத்தின் புதிய அருட்பணியாளர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இரவு 9 மணிக்கு பாராட்டும் பரிசு வழங்குதல் நடக்கிறது நீட் தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் 600 க்கு மேல் பெற்றவர்களுக்கும், 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் பரிசு வழங்கப்படும். ஜூபிலி தம்பதியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்படும். 2 ம் நாள் விழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி மேனாள் பங்கு தந்தையர்கள், கோட்டாறு மறைவட்டம் வட்டார முதல்வர் பேரருட்பணி பெர்க்மான்ஸ், கம்ளார் அருட்பணி வில்லியம், அப்பட்டுவிளை அருட்பணி புரூஸ், இருதயபுரம் அருட்பணி டோமினிக் கடாட்ச தாஸ் ஆகியோர் தலைமையில் வெட்டுவெந்தி புனித அந்தோணியார் திருத்தல அதிபர் அருட்பணி சகாயதாசு மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு சிறார் இயக்கம், இளம் கிறிஸ்தவ மாணாக்கர் இயக்கம் வழங்கும் உதவும் கரங்கள் நம்பிக்கையின் இதயங்கள் கலைச்சாரல் நடக்கிறது. விழா நாட்களில் காலை 6.15 மணிக்கு திருப்பலி இல்லத் தந்தையர்கள் தலைமையில் நடக்கிறது.3 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு திருப்பலி மறைமாவட்ட செயலர் பேரருட்பணி அந்தோணி முத்து தலைமையில் மறைமாவட்ட முப்பணிக் குழுக்களின் இயக்குனர் அருட்பணி ஆன்றூஸ் மறையுரையோடு நடக்கிறது. 11 மணிக்கு அன்பு விருந்து, மாலை 6 மணிக்கு திருமுழுக்கு, இரவு 7 மணிக்கு தூய மரியன்னை மறைக்கல்வி மன்றம் வழங்கும் இயற்கையில் மிளிரும் இறைமாட்சி நடக்கிறது. 4 ம் நாள் விழாவில் காலை 10.30 மணிக்கு ஆங்கில திருப்பலி நாஞ்சில் நாதம் இயக்குனர் அருட்பணி ஞானதாஸ் தலைமையில் அருட்பணி பெஞ்சமின் மறையுரையோடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி மேனாள் இணை பங்குத்தந்தையர்கள், மாத்திரவிளை வட்டார முதல்வர் பேரருட்பணி பிளாரன்ஸ், அருட்பணி ஆரோக்கிய ஜோஸ், அருட்பணி பபியான்ஸ், அருட்பணி ஜேம்ஸ், அருட்பணி அனிஷ், அருட்பணி ரஞ்சித் ஆகியோர் தலைமையில் அருட்பணி டைட்டஸ் மோகன் மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு புனித தேவசகாயம் வரலாறு கூறும் சமூக நாடகம் நடக்கிறது. 5 ம் நாள் விழாவில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மாதா பிறந்த நாள் விழா தொடர் திருப்பலி நடக்கிறது. காலை 7 மணி முதல் 8 மணி வரை சுவாமியார்மடம் புனித யூதா ததேயு திருத்தல பக்தர்கள், 8 முதல் 9 மணி வரை செட்டிச்சார்விளை பங்கு, 9 முதல் 10 மணி வரை காரங்காடு வட்டாரம், 10 முதல் 11 மணி வரை மாத்திரவிளை மற்றும் வேங்கோடு வட்டாரங்கள், 11 முதல் 12 மணி வரை மறைமாவட்ட கோல்பிங் இந்தியா இயக்கம் - பணிக்குழுவினர், மதியம் 12 முதல் 1 மணி வரை மரியாயின் சேனை திருத்துவபுரம், முளகுமூடு கொமித்சியம், 1 முதல் 2 மணி வரை மறைமாவட்ட இளைஞர் இயக்கம், கத்தோலிக்க சேவா சங்கம் - பணிக் குழுவினர், 2 முதல் 3 மணி வரை மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூகம் - பணிக் குழுவினர், மாலை 3 முதல் 4 மணி வரை திருத்துவபுரம் வட்டாரம், 4 முதல் 5 மணி வரை புத்தன்கடை வட்டாரம், 5 முதல் 6 மணி வரை முளகுமூடு வட்டாரம். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, அன்னையின் தேர்பவனி ஆலயம் சுற்றி வருதல் நடக்கிறது. 6.40 மணிக்கு திருப்பலி முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி டேவிட் மைக்கிள் தலைமையில் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருட்பணி மரிய பாஸ்டின் துரை மறையுரையோடு நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அன்பிய ஒருங்கிணையம் வழங்கும் ஆண்டுவிழா கலை நிகழ்வுகள் நடக்கிறது. 6 ம் நாள் விழாவில் காலை 10 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை 10.30 மணிக்கு தூய சகாய அன்னை நவநாள், சிறப்பு திருப்பலி, நற்செய்தி கொண்டாட்டம், மதியம் புனித உணவு கல்லுக்கூட்டம் அருட்பணி அருள் வினிஷ் தலைமையில் மணலி அருட்பணி காட்வின் சவுந்தர் ராஜ் மறையுரையோடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, சகாய அன்னை நவநாள், தேர்பவனி நடக்கிறது. மாடத்தட்டுவிளை அருட்பணி ஜேம்ஸ் தேர்பவனி வழி நடத்துகிறார். தேர்பவனி நிறைவில் திருப்பலி இல்லத் தந்தையர்கள் தலைமையில் நடக்கிறது. 7 ம் நாள் விழாவில் காலை 10.30 மணிக்கு திருப்பலி புனித சவேரியார் பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் அருட்பணி சார்லஸ் விஜு தலைமையில் போப் 2 ம் ஜாண் பவுல் கல்வியியல் கல்லூரி தாளாளர் அருட்பணி அலோசியஸ் மறையுரையோடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி தேவசகாயம் மவுண்ட் வட்டார முதல்வர் பேரருட்பணி அருள் யூஜின் ராய் தலைமையில் மேல ஆசாரிப்பள்ளம் அருட்பணி சுதர்சன் மறையுரையோடு நடக்கிறது. அருட்பணி பென்கர், அருட்பணி பெஞ்சமின், அருட்பணி பிரைட், அருட்பணி ஜெரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இரவு 8.30 மணிக்கு நடன நிகழ்ச்சி நடக்கிறது. 8 ம் நாள் விழாவில் காலை 9 மணிக்கு நோயாளர் சிறப்பு திருப்பலி நடக்கிறது. 10.30 மணிக்கு திருப்பலி வழுதலம்பள்ளம் நாஞ்சில் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் அருட்பணி சர்ஜின் ரூபஸ் தலைமையில் வட்டம் அருட்பணி ஜாக்சன் மறையுரையோடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி தக்கலை, மணலிக்கரை, சுவாமியார்மடம் கார்மெல் சபை குழுமங்களின் அருட்பணியாளர்கள் தலைமையில் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு நடனப் போட்டி நடக்கிறது. 9 ம் நாள் விழாவான 12 ம் தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி சிலுவைபுரம் அருட்பணி ஷெபின், அருட்பணி சுரேஷ், அருட்பணி ஜிஜோ, அருட்பணி பிருதிவி தாமஸ் ஆகியோர் தலைமையில் சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் அருட்பணி காட்வின் செல்வ ஜஸ்டஸ் மறையுரையோடு நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி குழித்துறை மறைமாவட்ட முதன்மை பணியாளர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமையில் இயேசுவைக் காண்போம் ஆன்மீக மையம் இயக்குனர் அருட்பணி ரபேஸ் மறையுரையோடு நடக்கிறது. இரவு 9 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. 10 ம் நாள் விழாவான 13 ம் தேதி காலை 5 மணிக்கு திருப்பலி இல்லத் தந்தையர்கள் தலைமையில் நடக்கிறது. 9 மணிக்கு பெருவிழா சிறப்பு திருப்பலி குழித்துறை மறைமாவட்ட நிதிபரிபாலகர் பேரருட்பணி ஜெயகுமார் தலைமையில் திருத்துவபுரம் வட்டாரம் வட்டார முதன்மை பணியாளர் பேரருட்பணி வைசிலின் சேவியர் மறையுரையோடு நடக்கிறது. 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. மாலை 6 மணிக்கு ஜெபமாலை, சிறப்பு தேரடி திருப்பலி, நற்கருணை இறையாசீர் கூட்டமாவு அருட்பணி பெஞ்சமின் தலைமையில் கோழிப்போர்விளை அருட்பணி பென்கர் மறையுரையோடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அதிபர் மற்றும் பங்குத்தந்தை அருட்பணி கில்பர்ட் லிங்சன், இணை பங்குத்தந்தை அருட்பணி போபின், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் மரிய ஜாண் வரதராஜ்,
செயலாளர் அஜின் , துணைச் செயலாளர் ஐபர்ட் ராஜ் ,
பொருளாளர் ஜெயந்தி , பங்கு அருட்பணி பேரவை, பங்கு இறைமக்கள், இல்லத் தந்தையர்கள், அருட்சகோதரிகள் இணைந்து செய்து உள்ளனர்.