இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம் அஞ்சலகங்களில் ரூ10/ ரூ15 லட்சத்திற்கான விபத்து காப்பீடு ஆண்டிற்கு வெறும் ரூ.520/ ரூ.555/ ரூ.755 ரூபாயில்.
அஞ்சல்துறையின் கீழ் செயல்படும் இந்தியாபோஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி , பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520/ரூ.555/ ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம் / ரூ.15 லட்சம் மதிப்பு உள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
சாமானிய மக்களுக்கும் விபத்துகாப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலைமுடுக்கு எல்லாம் உள்ள அஞ்சலங்கள் (தபால்காரர் / கிராம அஞ்சல்ஊழியர்கள்) மூலம், மிககுறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம்.
விண்ணப்பபடிவம், அடையாள / முகவரிசான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
ரூ.10.00 லட்சம்/15.00 லட்சம்மதிப்பு உள்ள விபத்துகாப்பீடு (விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு / நிரந்தர முழு ஊனம் / நிரந்தரபகுதி ஊனம்)
ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி
தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ளும் வசதி
விபத்தினால் ஏற்படும் மருத்துவசெலவுகள் (உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் ரூ.1,00,000 வரை
விபத்தினால் மரணம் / நிரந்தரமுழுஊனம் / நிரந்தரபகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) கல்வி செலவுகளுக்கு ரூ.100000/- வரை
விபத்தினால் மரணம் / நிரந்தரமுழுஊனம் / நிரந்தரபகுதி ஊனம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் 2 குழந்தைகள்) திருமண செலவுகளுக்கு ரூ.100000 வரை
விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு, தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சம் ரூ.1000 வீதம் 15 நாட்களுக்கு ( 2 நாட்கள் கழிக்கப்படும்)
விபத்தினால் உயிரிழக்க நேரிட்டால், ஈமக்கிரியைகள் செய்ய ரூ.5000 வரை.
ஆண்டிற்கு வெறும் ரூ.555-ல் / ரூ..755-ல் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல்நல நெருக்கடிகளையும் / நிதிநெருக்கடிகளையும்/ உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்யமுடியும் என்பதால், பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் / தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் உடனே இணைந்து பயன் பெறுமாறு குமரி மாவட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கேட்டு கொண்டு உள்ளார்.