கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 103 வது ஆண்டு திருவிழா செப்டம்பர் 25 ம் தேதி துவங்குகிறது

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய திருவிழா  செப்டம்பர் மாதம் 25ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆலயம் உலகிலேயே முதன் முதலில் குழந்தை இயேசுவின் புனித தெரேசாவுக்கு அர்பணிக்கப்பட்ட ஆலயம் ஆகும். நான் அனைத்து இந்திய மக்களையும் சிறு மலருக்கு வணக்கம் செலுத்த கண்டன்விளைக்கு அழைப்பேன் என்னும் பொன்மொழிகள் பொறிக்கப்பட்டு இங்கு ஒலிக்கும் ஆலய மணிகள் இரண்டும் குழந்தை இயேசுவின் புனித தெரேசாவின் சகோதரிகள் அனுப்பி வைத்ததாகும். இந்த ஆலய இரு  சுருபங்களும் ரோமையில் இருந்து அனுப்பி பெறப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. 
‎
‎சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் 103-வது ஆண்டு  திருவிழா வரும் 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வரை நடக்கிறது. இதற்கான முன் தயாரிப்பாக  நாளை  22ம் தேதி முதல் 23, 24 ஆகிய ஆகிய நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஜெப கொண்டாட்டம் நடக்கிறது. திருவிழாவில் 25 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு முன்னோர் நினைவு திருப்பலி, கல்லறை தோட்ட மந்திரிப்பும், மாலை 5 மணிக்கு திருக்கொடி பவானி, ஜெபமாலை, புகழ்மாலையும் தொடர்ந்து  7 மணிக்கு திருத்துவபுரம் பேராலய அதிபர் அருட்பணி ஐசக்ராஜ் தலைமையில் திருக்கொடியேற்றமும்,  கம்ளார் பங்குத்தந்தை அருட்பணி மரிய வில்லியம் அருள் உரையுடன் திருப்பலியும், இரவு அன்பு விருந்தும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை மாலை திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
‎
‎7ம் திருவிழாவான அக்டோபர் 1ம் தேதி காலை நவநாள் திருப்பலி, மாலை 6.30  மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை 7 மணிக்கு பாதுகாவலிக்கு மலர் அஞ்சலியுடன் திருப்பலியும், இரவு 9 மணிக்கு தங்க தேர் பவனி தொடர்ந்து அன்பு விருந்து ஆகியவை நடக்கிறது. 8ம் திருவிழாவான 2ம் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலியும், மாலை 7 மணிக்கு அருட்பணி சார்லஸ் விஜூ தலைமையில், பட்டரிவிளை பங்கு தந்தை அருட்பணி ஜாண் விபின்  அருளுரையில் திருப்பலியும், 9ம் திருவிழாவான 3ம் தேதி காலை 8 மணிக்கு மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை அருட்பணி மரிய ராஜேந்திரன் தலைமையில், வளனூர் பங்குத்தந்தை ஆல்வின் ஜோஸ் அருளுரையில் முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 7 மணிக்கு முளகுமூடு மரியன்னை பசிலிக்கா அதிபர் அருட்பணி கில்பர்ட் லிங்சன் தலைமையில், ரோமையில் பணிபுரியும் அருட்பணி ஞானதாஸ் அருளுரையில் திருப்பலி, இரவு 9.30 மணிக்கு தேர் பவனி, 10.15 மணிக்கு லைட் ஷோ ஆகியவை நடக்கிறது.
‎‎10ம் திருவிழாவான 4ம் தேதி காலை 5.30 மணிக்கு செட்டிச்சார்விளை பங்குத்தந்தை அருட்பணி பிரிதிவிதாமஸ் தலைமையில், நுள்ளிவிளை பங்குத்தந்தை அருட்பணி ரஞ்சித் அருளுரையில் திருப்பலி, காலை 8 மணிக்கு  சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் அருட்பணி காட்வின் செல்வ ஜெஸ்டஸ் தலைமையில் ஹெலன்நகர் பங்குத்தந்தை அருட்பணியாளர் ஜான்போஸ்கோ அருளுரையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் மறைமாவட்ட அருட்பணியாளர் இன்னாசி ராஜசேகரன் மலையாளத்தில் திருப்பலி நடத்துகிறார். காலை 11 மணிக்கு திருத்தேர் பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், தொடர்ந்து திருக்கொடி இறக்கம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அருட்பணி ஆல்டஸ் பிரின்டன் பஜீவ், இணை பங்குத்தந்தை அருட்பணி ஐசக் டேவிட், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஜஸ்டஸ், செயலாளர் ஐசக், பொருளாளர் வறுவேலாள், துணைச் செயலாளர் ஜாக்கீர் சுபிஸ், பங்கு அருட்பணி பேரவை உறுப்பினர்கள், அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் ஆகியோர் இணைந்து  சிறப்பாக செய்து வருகின்றனர்.
‎

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *